கைதுசெய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர்  மேலதிக விசாரணைகளுக்காக சி. ஐ. டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக சொத்து சேகரித்தமை தொடர்பில் 42 வயதுடைய சேகு சியாப்டீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வைத்தியரின் வருமான வழிவகைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது