மஹவிலச்சிய, எலபத்கம பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இரு சகோதரிகள் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த இரு  சகோதரிகளும் நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள குடா தம்மென்னாவ குளத்திற்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளனர். 

இதனையடுத்து அவர்களது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் குளிக்கச் சென்ற குளத்துக்கு அருகிலிருந்து அவர்கள் எடுத்துச் சென்ற உடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இருவரின் சடலங்களும்  இன்று மீட்கப்பட்டுள்ளன. 

22 வயது மற்றும் 26 வயதுடைய குறித்த சகோதரிகளே இவ்வாறு உயிருழந்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.