சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்கள் சிலர் இன்று சனிக்கிழமை அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிற்கினங்க அவரை சந்தித்து கலந்துரையாடினர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிலமை தொடர்பிலும், அந்த தாக்குதலினை தவிர்ப்பதற்கு தவறியமை தொடர்பில் அரசியல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புக்கள் தொடர்பில் சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்கள் பிரதமரிடம் காரணங்களை கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பில் தேடியறிவதற்கென பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இங்கு பிரதமர் தெரிவித்தார்.