இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 'மாமனிதர்" என்றும், 'மகத்தான தலைவர்" என்றும் வர்ணித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரைப் பிரதமராகக் கொண்டிருப்பதற்கு இந்திய மக்கள் அதிஷ்டம் செய்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று தனது டுவிட்டர் தளப்பதிவில், மோடி பெற்றிருக்கும் பெரிய அரசியல் வெற்றி குறித்து அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாகவும், மகத்தான தலைவரான அவர் பிரதமராகக் கிடைக்கப்பெற்றுள்ளமை இந்தியர்கள் செய்த அதிஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 டுவிட்டர் பதிவை செய்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், 'சற்று முன்னர் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு எமது நாட்டின் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்தேன். அவர் ஒரு பெரிய தேர்தலுக்கு முகங்கொடுத்தார். அவர் எனது நல்லதொரு நண்பர். இந்தியாவுடன்  நாம் நல்ல உறவுகளைக் கொண்டிருக்கின்றோம்" என்று கூறினார்.