அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 2014/2015 ஆம் ஆண்டுகளில் லக் சதோசவில் இடம்பெற்ற 257,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலான விசாரணைக்கு வாக்குமூலம் வழங்கவே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.