(ஆர்.விதுஷா)

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக ஐந்து பொலிஸ்அத்தியட்சகர்களுக்கு  உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பீ.ஏ.டி.கே.பீ. கருணாநாயக்க  நுகேகொடை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மறுப்புறம்  எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் டி.ஜீ.ஏ.ஓ.டி. தல்துவ யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக  நியமிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், மன்னார் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எச்.எஸ்.ஏ.பீரிஸ் எல்பிட்டிய  பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும்,  பொலிஸ் மனிதவள முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரான பொலிஸ் அத்தியட்சர் பி.டி.ரி.பீ. ஏ.வீரசிங்க  மன்னார் பொலிஸ்பிரிவுக்கு பொறுப்பாகவும், நுகேகொட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ்  அத்தியட்சகர் எச்.பீ.ரணசிங்க பொலிஸ் மனிதவள முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளராகவும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.