மத்திய கிழக்கிற்கு 1500 படையினரையும் போர் விமானங்களையும் அனுப்ப தீர்மானித்தள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

1500 படையினரும் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளி;ல ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தற்போது மோதலில் ஈடுபடவிரும்பவில்லை என நான் கருதுகின்றேன்,அவர்கள் எங்களுடன் மோதலில் ஈடுபடவிரும்பவில்லை என நினைக்கின்றேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மத்திய கிழக்கில் பாதுகாப்பை கொண்டிருக்க விரும்புகின்றோம் சிறிய எண்ணிக்கையிலாக துருப்பினரை அனுப்ப தீர்மானித்துள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1500 படையினரில் ஏவுகணை பொறிமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும்,வான்வெளி கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்களும் பொறியியலாளர்களும்  இடம்பெறவுள்ளனர்.போர் விமானங்களையும் அமெரிக்க அனுப்பவுள்ளது

 ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலா முறுகல் நிலை கடந்த மூன்று வாரங்களாக தீவிரமடைந்துள்ள நிலையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கிற்கு மேலதிக படையினரை அனுப்பும் அமெரிக்காவின் முடிவு உலக சமாதானத்திற்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் முகமட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தங்கள் மோதல் கொள்கையை நியாயப்படு;த்துவதற்காகவும் வளைகுடாவில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவும் ஈரானிற்கு  குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னம் அதிகரிப்பது மிகவும் ஆபத்தான விடயம் இது சர்வதேச அமைதி பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.