(நா.தினுஷா)

அரசியல் செய்யும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. கட்சி பேதமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையும் இன்று உருவாகியுள்ளது. இன்று என்னையும் ஐ.எஸ் பயங்கரவாதி என்று விமர்சிக்கின்றனர்.  ஆனால் அந்த விமர்சனங்களை கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்று  நிதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்  தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.   

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் அதுகோரள மேலும் கூறியதாவது;

தற்போது என்னையும் ஐ.எஸ் தீவிரவாதி என்று விமர்சிக்கின்றார்கள். ஆனால் அதனைக்கண்டு நான் அஞ்சப் போவதில்லை. இன்று கட்சி வேறுப்பாடின்றி வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் அரசியல் செய்ய உரிமைள் வழங்கப்பட்டுள்ளன, எனத்் தெரிவித்துள்ளார்.