(ஆர்.விதுஷா)

பிலியந்தல - ஹெடிகம  பகுதியில்  வெளிநாட்டு தயாரிப்பு   கைக்குண்டு,  துப்பாக்கி  என்பவற்றுடன் சந்தேக நபர்கள் நால்வர்  கைது  செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்தனர்.  

பிலியந்தல பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகலுக்கு அமைய பொலிஸா சந்தேகத்திற்கு இடமான  காரொன்றை  நிறுத்தி  சோதனைக்கு  உட்படுத்தியுள்ளனர். 

 குறித்த காரிலிருந்து வெளிநாட்டு தயாரிப்பு கைத்துப்பாக்கி, கைக்குண்டு, சிறிய கத்திகள் இரண்டு , 200 கிராம்  வெடிமருந்து என்பன  கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த  சந்தேகநபர்கள் பயணித்த காரும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் 29,36 மற்றும் 34 வயதுடைய மொரவக்க, பேலியகொடை, களனி ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள்  எனவும்  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.  

குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  பிலியந்தல   பொலிஸார்  நேற்றைய  தினம்  மேற்கொண்டதுடன்,  விசாரணைகளையும்  முன்னெடுத்து  வருகின்றனர்.