பொதுவேட்பாளர் தம்மிக பெரேரா : எவ்வித உண்மையுமில்லை என்கிறது ஐ.தே.க.

By Daya

25 May, 2019 | 03:30 PM
image

(நா.தனுஜா)

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வர்த்தகரான தம்மிக பெரேராவை பொதுவேட்பாளராகக் களமிறக்க ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்திருப்பதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற அடிப்படையில் இராப்போசன மேசைகளில்வைத்து ஐக்கிய தேசியக்கட்சி இத்தகைய அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

நாங்கள் அனைத்து இடங்களிலும் ஜனநாயகம் குறித்துப் பேசுகின்றோம். நாட்டில் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூச்சலிடுகின்றார்கள். ஆனால் கட்சிகளுக்குள் அந்த ஜனநாயகம் இல்லை. பொதுவாக கட்சியில் சாதாரண ஒருவருக்கோ அல்லது நன்கு கற்ற ஒருவருக்கோ முன்னேற முடியாது. தந்தையின் பின்னர் அவரது மகன் அல்லது மகளோ, உறவினரோ தலைமைத்துவத்திற்கு வருவார்கள். அவ்வாறு வந்தவர்களே பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

கற்றறிந்த அறிவார்ந்த இளைஞர்கள் இருக்கின்றார்கள். அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவ்வாறானவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடிய வகையில் இந்த அரசியல் முறைமை மாற்றமடைய வேண்டும். நாம் எம்முடைய மனசாட்சியைக் கேட்டுப்பார்க்க வேண்டும். நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. இவையனைத்தையும் புரிந்துகொள்ளக் கூடிய தலைமைத்துவமொன்று இருக்க வேண்டும். நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் குறித்துப் பேசவில்லை. மாறாக நாட்டின் அரசியல் தலைமைத்துவம் குறித்தே பேசுகின்றேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41
news-image

பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில்...

2022-10-05 12:24:53
news-image

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹசிம்...

2022-10-05 12:58:17
news-image

இலங்கை தொடர்பான இறுதி நகல்வடிவம் சமர்ப்பிப்பு...

2022-10-05 12:10:30
news-image

தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்...

2022-10-05 12:02:41
news-image

உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில்...

2022-10-05 12:15:18
news-image

போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளரை இடமாற்றக்...

2022-10-05 12:42:47
news-image

பல்கலைக்கழகங்களில் பல கொடுமைகள் இடம்பெறுகின்றன -...

2022-10-05 11:30:12
news-image

சிறுவர் தினத்தன்று மிருகக்காட்சிசாலையில் அதிக வருமானம்

2022-10-05 11:24:46
news-image

அடக்குமுறை தொடர்ந்தால் ஆட்சியிலிருந்து விரைவில் வெளியேற...

2022-10-05 11:28:33
news-image

வெளியானது எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பான...

2022-10-05 12:35:42
news-image

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி : ஒருவர்...

2022-10-05 11:25:59