உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று இரு பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

லண்டனில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஓர் பயிற்சிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன.

இதவேளை சவுதம்டனில் இன்று மாலை 3.00 மணிக்கு இடம்பெறும் மற்றுமோர் ஆட்டத்தில் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் ஈயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதவுள்ளது.