தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு தலைமைகளையும் இழந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர்  முதன் முறையாக புதிய தலைமைகளின் கீழ் இத் தேர்தலைச் சந்தித்துள்ளனர். இத் தேர்தல் முடிவுகளோ  தோற்றவர், வென்றவர் என இரு தரப்பையும் மகிழ்ச்சியடையவே வைத்துள்ளன. 

Related image

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடியா இந்த லேடியா என்று சவால்விட்டு  40க்கு 37 என்ற தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் தேசிய அளவில் அ.தி.மு.க.வை 3ஆவது கட்சியாக  உருவாக்கினார். மத்தியை ஆண்டவர்களுக்கு ஜெ.யும்  அவரது அ.தி.மு.க.வும் சிம்மசொப்பனமாகவே இருந்தது. 

ஆனால் எதிர்பாராத ஜெ மரணம் அடுத்தடுத்து அக் கட்சியில் இடம்பெற்ற குளறுபடிகள் அ.தி.மு.க. இறுதியில் மத்திய அரசின் கைப்பொம்மை என்ற நிலைக்குச் சென்றதோடுஇ இத் தேர்தலில் ஜெயலலிதா யாரை எல்லாம் எதிர்த்தார்களோ அவர்களோடு எல்லாம் கூட்டு வைத்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 

ஆனால்  தி.மு.க. தலைவராக ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலில் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் வென்றது போலவே  39க்கு 38 என  தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இது ஸ்டாலினுக்கு மிகப் பெரிய வெற்றி. கருணாநிதியை இழந்த தி.மு.க.வுக்கு இது வரலாற்றுச் சாதனை என்ற போதிலும் இந்த ஆட்சியைக் கலைத்து முதல்வராகும் வாய்ப்பை ஸ்டாலின் தவற விட்டுள்ளார்.  தி.மு.க. இவ்வளவு வெற்றிகளைப் பெற்றபோதும், அதனால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது .

 இதேவேளை 22 சட்ட மன்றத் தொகுதிகளில் 8 இல் ஜெயித்தால் ஆட்சியை தக்க வைக்கலாம் என்ற எடப்பாடியின் கனவு இங்கு நனவாகிப் போனதால் 13 சட்ட மன்றத் தொகுதிகளை வென்ற போதிலும் 9 இல் அ.தி.மு.க. வென்றுள்ளமை மற்றும் மதத்தியில் அ.தி.மு.க.வின் ஆதரவான பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்துள்ளமை என்பன அ.தி.மு.க.வின் இருப்பை எடப்பாடியின் ஆட்சியை தொடரச் செய்துள்ளன. இதனால் தோற்ற போதும் ஆட்சி தப்பிய மகிழ்ச்சியே எடப்பாடியாருக்கும் அ.தி.மு.க.வினருக்கும். 

இதேவேளை பெருத்த சவாலைத் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினகரன் தோல்வியைத் தழுவிவிட்டார். மற்றும் கமலும் சீமானும் இத் தேர்தலில் சம அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் பல இடங்களில் மாறி மாறி இருவரும் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளனர்.ஆயினும் கமல் என்ற நட்சத்திர அந்தஸ்து  எம்.ஜி.ஆர். போன்றெல்லாம் இல்லை. அரசியலில் இறங்கும் எல்லா சினிமா நட்சத்திரங்களுமே முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆராகி விட முடியாது என்பதை இத் தேர்தல் தெளிவுபடுத்தியுள்ளது. 

ஆயினும் அவர் 3ஆவது சக்தியாக இனம் காணப் பட்டுள்ளார். அத்தோடு தமிழகம் என்றால்  திராவிட பெரியார் மண். இங்கு மத சாயம் பூச முடியாது. அ.தி.மு.க.இ தி.மு.க. மட்டுமே ஆட்சியைப் பிடிக்கும்.  ஒரு மூன்றாவது சக்தி ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் அத்தனை எளிதல்ல என்பதை எடுத்துக் காட்டியுள்ளது இத்தேர்தல்.