உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள  வீரர்களில் எவரையும் ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டுகளிற்காக ஐசிசி கண்காணிக்கவில்லை என  அதன் ஊழல் தடுப்பு பிரிவின் பொதுமுகாமையாளர் அலெக்ஸ் மார்சல் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 மாதங்களாக நாங்கள் சுமார் 15 பேரிற்கு  எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் எவரும் தற்போது கிரிக்கெட் விளையாடுபவர்கள் இல்லை என குறிப்பி;;ட்டுள்ள அலெக்ஸ் மார்சல்  சிரேஸ்ட அதிகாரிகள் - அதிகாரிகள் கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை உறுப்பினர்கள் பயிற்றுவிப்பாளர்கள் போன்றவர்களிற்கு எதிராகவே நாங்கள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊழலில் ஈடுபடுவதற்கு 30 பேர் மேற்கொண்ட முயற்சிகளையும் நாங்கள் முறியடித்துள்ளோம் இவர்கள் வெளியாட்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் இவர்கள் உலகின் எந்த பகுதியிலிருந்தாலும் அவர்களை பி;ன்தொடர்ந்தோம்,கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறும் இடங்களிற்கு அருகில் அவர்கள் செயற்படுவதை கடினமானதாக்கினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு வேலியை தாண்டி ஆட்டநிர்ணய சதி முயற்சியில் ஈடுபடுபவர்களால் வீரர்களை அணுகமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ணப்போட்டிகள் சிறப்பாக  ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வகிக்கப்பட்ட நன்கு பாதுகாக்கப்பட்டவையாக விளங்கப்போவதை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட முயல்பவர்கள் காணப்போகி;ன்றார்கள் எனவும் அலெக்ஸ் மார்சல் தெரிவித்துள்ளார்.

இது ஆட்டநிர்ணய சதிகாரர்கள்  தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள முடியாத கடினமான உலக கிண்ணமாக விளங்கப்போகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

வீரர்களிற்கு ஆட்டநிர்ணய சதிகாரர்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம்,எங்கள் பிரிவினர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடக்கூடியவர்களை கண்காணிப்பில் வைத்திருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண அணிகளில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் ஊழல் ஆபத்துக்கள் எவ்வாறானவை என்பது தெரிந்திருக்கின்றது,இதிலிருந்து எப்படி தங்களை தவிர்க்கவேண்டும் என்பதும் தெரிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் முயற்சிகள் குறித்து வீரர்கள் ஐசிசி அதிகாரிகளிற்கு முறையிடுவது அதிகரித்துள்ளது எனவும் அலெக்ஸ் மார்சல் தெரிவித்துள்ளார்