வரக்காப்பொல பிரதேசத்தில், 75 ஆயிரம்ரூபா பெறுமதியான 6 இளம் பசுக்கன்றுகளுடன் இரு சந்தேக நபர்களை வரக்காப்பொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ராகம மற்றும் அம்பலந்தொட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரு  சந்தேக நபர்களும்வரக்காபொல, கிரியுல்ல, நிட்டம்புவ, நாரம்மல, கொடதெனியா மற்றும் மீரிகம பகுதிகளில்இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன்தொடர்புடையவர்கள்என ஊடக பிரிவு மேலும்தெரிவித்துள்ளது.

இந்நிலையில்குறித்த சந்தேக நபர்கள்இருவரையும்துல்ஹிரிய நீதிவான் நீதிமன்றத்தில்இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.