(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)


இஸ்லாம் அடிப்­ப­டை­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்த அமுல்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­கா­லச்­சட்­டத்தை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மாண­வர்­களை அடக்க நட­வ­டிக்கை எடுப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அத்­துடன் அவ­ச­ர­காலச் சட்டம் அமுலில் இருந்தும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாத தாக்­கு­தலை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கத்­துக்கு முடி­யாமல் போயுள்­ளது என மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித்த ஹேரத் தெரி­வித்தார்.


பாரா­ளு­மன்­றத்தில் நேற்று அவ­ச­ர­கா­லச்­சட்­டத்தை நீடிப்­பது தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,


அர­சாங்கம் நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது. தொடர்ந்தும் அதனை நீடிப்­பதன் அவ­சியம் இருப்­பதால் அதற்கு ஆத­ர­வ­ளிக்­கின்றோம். ஆனால் அவ­ச­ர­கால சட்­டத்தை தொடர்ந்து கொண்­டு­செல்­வது ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மாகும்.அது மக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக அமையும்.


இஸ்லாம் அடிப்­ப­டை­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­தவே அவ­ச­ர­கால சட்­டத்தை அர­சாங்கம் அமுல்­ப­டுத்­தி­யது. ஆனால் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழத்தின் மாணவ தலைவர் மற்றும் செய­லாளர் இரு­வரும் இந்த சட்­டத்தை பயன்­ப­டுத்தி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­துக்கு கீழ் கைது­செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்கப்பட்டனர்.  
  இது முறை­யா­காது.  அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்­தும்­போது, இந்த சட்­டத்தை பயன்­ப­டுத்தி தொழிற்­சங்க போராட்­டங்­க­ளையோ அர­சியல் பழி­வாங்­கல்­க­ளையோ மேற்­கொள்ள இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்று ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். அதற்­கான பொறுப்­பையும் அவர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார்.


அப்­ப­டி­யானால் யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் கைது­செய்­யப்­பட்­டி­ருப்­பது அடிப்­ப­டை­வாத குற்­றத்­துக்கு அல்ல. பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்­துக்கு கீழே கைது­செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். அது­தொ­டர்­பாக அர­சாங்கம் அவ­தானம் செலுத்­த­வேண்டும்.

மேலும் நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலையில் மக்கள் கோபப்­பட்டு வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வதை தடுக்­கவே அவ­ச­ர­கா­லச்­சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் இந்த சட்டம் அமுலில் இருக்­கும்­போ­துதான் குரு­ணாகல் மாவட்­டத்தின் பல பிர­தே­சங்­க­ளிலும் மினு­வாங்­கொடை பகு­தி­யிலும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக இன­வாத தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. அந்த மக்­களின் கடைகள் வீடுகள் எரிக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு பின்னால் அர­சியல் சக்­திகள் இருப்­பது தற்­போது உறு­தி­யாகி இருக்­கின்­றது. என்­றாலும் அர­சாங்­கத்­துக்கு இதனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல்­போ­யுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­களின் சொத்­துக்­க­ளுக்கு ஏற்­பட்ட சேதங்களுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இன்னும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதுதொடர்பில் எந்த அறிவிப்பும் செய்யவில்லை. அதனால் அரசாங்கம் அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பாக அவதானம் செலுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை முறையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.