வியாழக்கிழமை இந்திய தேர்தலில் நரேந்திரமோடி மகத்தான வெற்றியை பெற்ற அதேவேளை நேரு காந்தி வம்சத்தின் வாரிசான ராகுல்காந்தி மிக மோசமான தோல்வியால் அடித்து நொருக்கப்பட்டார்.

அவர் அந்த அரசியல் வம்சத்தின் முதன்மை வாரிசு.அவரதுகொள்ளுப்பாட்டனார் சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர்.அவரது பாட்டி இந்திராகாந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர் அவரது தந்தை இந்தியாவின் முதல் இளம் பிரதமர்.

2014 தேர்தல் தோல்விகளே காங்கிரஸ் கட்சி சந்தித்த மோசமான தேர்தல் என்றால்  2019 தேர்தல் ராகுல்காந்திக்கு அதனை விட பலமான அடியை வழங்கியுள்ளது.

ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

எனினும் கேரளாவில் போட்டியிட்ட தொகுதியில் அவர் வெற்றிபெற்றுள்ளதால் அவர் பாராளுமன்றம் செல்கின்றார்.

எனினும் அமேதி தொகுதி என்பது ராகுல்காந்தியின் கௌரவத்திற்கான போட்டி.இந்த தொகுதியிலேயே அவரது பெற்றோர்கள் போட்டியிட்டு வென்றனர்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது  என்னுடைய அமேதி மக்களே என அழைத்து அவர் தொகுதியின் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கிய கடிதத்தினால் கூடபாஜகவின் ஸ்மிருதி ராணியிடமிருந்து அவர் அவமானத்தை சந்திப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

அவருடைய தொகுதி  இந்தியாவில் அதிக சனத்தொகையை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு அதிக ஆசனங்களை கைப்பற்றுபவர்களே தேர்தலில் வெற்றிபெறுவார்கள் என்பது நம்பிக்கை

ராகுல்காந்தியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட இந்தியாவின் எட்டு பிரதமர்கள் அந்த மாநிலத்திலிருந்தே தெரிவு செய்யப்பட்டனர்.

குஜராத்தை சேர்ந்தவரான நரேந்திரமோடியும் 2014 இல் உத்தரபிரதேசத்தின் வரணாசி தொகுதியிலேயே போட்டியிட்டார்.

இம்முறை காங்கிரஸ் வெற்றி பாஜகதோற்கடிக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை ஆனால் 2014 இல் கிடைத்த முடிவுகளை விட சிறந்த முடிவுகள் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்.

இதன் காரணமாகவே வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களிற்கும் கட்சியை சாராதவர்களிற்கும் அதிர்ச்சியை அளித்துள்ளன.

காங்கிரஸ் கட்சி பலவீனமான நிலையில் பாராளுமன்றத்தில் காணப்படும்.

பலரின் கேள்வி?

ஆனால் பலர் கேட்கும் கேள்வியொன்று உள்ளது- காந்தி யுகம் முடிவிற்கு வருகின்றதா என்பதே அந்த கேள்வி?

அல்லது காங்கிரஸ் கட்சியை மீண்டும் எழுச்சி பெறச்செய்வதற்காக அந்த யுகத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டுமா என்ற கேள்வியும் காணப்படுகின்றது

வியாழக்கிழமை செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ராகுல்காந்தி பாஜகவினதும் நரேந்திர மோடியினதும் வெற்றியை ஏற்றுக்கொண்டார்.

அவர் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

தேர்தலில் தோல்வியடைந்த வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நம்பிக்கை இழக்கவேண்டாம் என ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார்.

அச்சப்படவேண்டிய அவசியமில்லை நாங்கள் கடினமாக பாடுபட்டு இறுதியில் வெற்றிபெறுவோம் என ராகுல்காந்தி தெரிவித்தார்.

ஆனால் லக்னோவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காணப்பட்ட தொண்டர்கள்  ராகுல்காந்தி உறுதியளித்த எதிர்கால வெற்றி என்பது மிக நீண்ட தொலைவில் உள்ளது என கருதுகின்றனர்

எங்கள் மீதான நம்பகதன்மை மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது,மக்களிற்கு எங்கள் வாக்குறுதிகள் மீது நம்பிக்கையில்லை,நாங்கள் சொல்வதை நம்புவதற்கு மக்கள் தயாராகயில்லை என தெரிவித்தார் கட்சி தொண்டர் ஒருவர்

மோடி தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியபோதிலும் மக்கள் அவரை நம்புகின்றனர் என அந்த தொண்டர் குறிப்பிட்டார்.

ஏன் என நான் அவரிடம் கேள்வி எழுப்பினேன்

எங்களிற்கும் அது புரியவில்லை என்றார் அவர்.

காங்கிரசின் மோசமான தோல்வி ராகுல்காந்தியின் தலைமைத்துவம் குறித்து நிச்சயம் பல கேள்விகளை எழுப்பபோகின்றது.

பல ஆய்வாளர்கள் ஏற்கனவே அவர் தலைமை பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால் கட்சிக்கு வெளியேயிருந்து கடந்த காலங்களை போல வெளியாகியுள்ள இந்த வேண்டுகோள்களை கட்சியின் தலைமைத்துவம் நிராகரிக்கப்போகின்றது.

ராகுல்காந்தி கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகப்போகின்றார் என்ற வதந்திகள் புதுடில்லியில் வெளியாகியுள்ளன

எனினும் காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியை பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்போவதில்லை அவர் பதவி விலகினாலும்  அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கிறார்  மூத்த அரசியல்வாதி மணி சங்கர் ஐயர்.

கட்சி மோசமாக தோல்வியடைந்தமைக்கு கட்சியின் தலைமை காரணமில்லை அதற்கு வேறு காரணங்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டார்.

காந்தியின் அதிகாரம் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு  காரணமி;ல்லை  என கட்சியின் உள்ளுர் பேச்சாளர் ஒருவர் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி பூசல்களும்,பிழையான பிரச்சார தெரிவுகளுமே தோல்விக்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.

கட்சியின் கட்டமைப்பில் பலவீனங்கள் உள்ளன, கட்சியின் உயர்மட்டத்தில் உட்பூசல்கள் உள்ளன,நாங்கள் பிரச்சாரத்தினை தாமதமாகவே ஆரம்பித்தோம் என குறிப்பிடும் அவர்  உத்தரபிரதேசம் பீகாரில் மாநில கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தாது எங்கள் தவறு எனவும் குறிப்பிடுகின்றார்.

தேர்தல் தோல்விக்கு ராகுல்காந்தியே காரணம் என காங்கிரஸ் தலைமை இதுவரை குற்றம்சாட்டவில்லை.கட்சியின் பிரச்சாரமும் ஏனைய காரணங்களுமே தோல்விக்கு இட்டுச்சென்றன என தலைமை தெரிவிக்கின்றது

ஆளுமை போட்டி

வெற்றிகொள்ள முடியாத ஆளுமை போட்டியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தார் என்பதை காங்கிரஸ் கட்சியின் ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்கின்றனர்.

மோடி என்ற பிராண்டே தங்களின் வெற்றிப்பாதையில் தடையாக காணப்பட்டது என  அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

பிரதமர் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் அவரால் தனது அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்தது என்கின்றார் சிங்

ராகுல்காந்தி நரேந்திரமோடியிடம் தோல்வியடைவது இது முதல் தடவையல்ல.

2014 தேர்தலின் பின்னர்  ராகுல்காந்தியின் கதை முடிவிற்கு வந்துவிட்டது. என்ற உணர்வு காணப்பட்டது.

அதன் பின்னர் கட்சி பல மாநில தேர்தல்களில் தோற்றவேளை அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர் தொடர்புகொள்ளமுடியாதவராகவும் மந்தமான புதிரான தலைவராகவும் உள்ளார் என்ற விமர்சனங்கள் காணப்பட்டன.

ராகுல்காந்தியின் நேருகாந்தி குடும்ப வாரிசு தொடர்பை முன்வைத்தும் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ராகுல்காந்தி அவரது திறமையால் கட்சியின்  தலைமை பதவிக்கு வரவில்லை குடும்பத் தொடர்புகளே அதற்கு காரணம் என நரேந்திர மோடியே விமர்சித்திருந்தார்.

தனிப்பட்ட உரையாடல்களின் போது ராகுல்காந்தி எளிமையானவர் எதிராளிகளின் தந்திரமும் விழிப்புணர்வும் அற்றவர் என கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்

பிபிசி 

தமிழில் - ரஜீபன்