இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள பயிற்சி மையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி நிலைய கட்டடமொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட பயிற்சி நிலையத்தில் 14 முதல் 17 வயது மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் என்று கூறப்படுவதுடன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாணவர்கள் சிலர் கட்டடத்திலிருந்து கீழே குதித்துள்ளனர்.

அதில் பலர் காப்பாற்றப்பட்டு அருகில் இருக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் தீயை அணைக்க 18 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் படையினர் போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தினால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம்  இதுவரை கண்டறியப்படாத நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.