'மாணவர்களின் வருகையை அரசியலுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்'

Published By: Vishnu

24 May, 2019 | 07:33 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்க்கட்சியின் சில அரசியல் வாதிகளின் பொய் பிரசாரம் காரணமாகவே பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைவடைந்திருந்தன. மாணவர்களின் வருகை அதிகரிக்கும்போது அதனை தனது அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள சிலர் பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதிகளின் நோக்கம் நாட்டில் சிங்கள முஸ்லிம் பிரச்சினை ஒன்றை ஏற்படுத்தி நாட்டை இஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்வதாக இருக்கலாம். இதன் மூலம் மீண்டும் 83 கறுப்பு ஜூலை ஒன்றே ஏற்பட்டிருக்கும். கறுப்பு ஜூலையின்போதும் பயங்கரவாதிகளுடன் அதிகாமானவர்கள் இருக்கவில்லை. எதிராகவே செயற்பட்டனர். ஆனால் நாங்கள் முறைகேடாக செயற்பட்டதால் அது வேறு திசைக்கு மாறி, பாரிய நிலைக்கு சென்றது. இந்த சம்பவத்திலும் அவ்வாறான நிலைக்கு  செல்ல முடியாமல் அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு பிரிவுக்கும் தடுக்க முடியுமாகியுள்ளது.

என்றாலும் அரசியல் வாதிகள் மேற்கொண்ட பொய் பிரசாரம் காரணமாக கடந்த 13ஆம் திகதி குருணாகல் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பயங்கரவாத செயல் இடம்பெற்றது. என்றாலும் பாதுகாப்பு பிரிவு இதனை கட்டுப்படுத்தியதால் நாடுபூராகவும் இது பரவாமல் தடுக்க முடியுமாகியது. எதிர்க்கட்சியில் இருக்கும் சில அடிப்படைவாத பயங்கரவாதிகளே இதன் பின்னணியில் இருக்கின்றனர் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34