சர்வதேச கிரிக்கெட்டின் 12 ஆவது உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் சில அணிகளுக்கு பயிற்சிப் போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுகம் இன்றைய தினம் பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

அந்தவகையில் இன்றைய தினம் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலாவதாக களத்தடுப்பில் ஈடுபடும் இலங்கை அணி வீரர் போட்டியின் போது காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இது இடம்பெறவுள்ள 2019 ஆண்டுக்கான 12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதலாவது காயமாக பதிவாகியுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் அவிஷ்க பெர்னாண்டோ களத்தடுப்பிலீடுபடும் போது முழங்காலில் காயமேற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.