தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டடுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் பொறுப்பிலுள்ளனர்.

இவர்களின் 134 மில்லியன் ரூபா பெறுமதியான 41 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களிடம் மேலும் 14 மில்லியன் ரூபா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களிடம் 7 பில்லியன் சொத்துக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.