வாகனத்தின் சில்லில் சிக்கி பெண் யாசகரொருவர் பரிதாபமாக பலி

By Daya

24 May, 2019 | 04:55 PM
image

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் நகரின் மக்கள் வங்கிக்கு அருகாமையில் கனரக வாகனம் ஒன்றில் சில்லில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் வீதியை கடக்க முயற்சித்த குறித்த வயோதிபப் பெண் பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் குடாகம பகுதிக்கு சென்ற கனரக வாகனத்தின் முன் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் ஹட்டன் நகரில் இருக்கும் யாசகரொருவர் என  தெரியவந்துள்ளது.

குறித்த வாகன சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், விபத்துடன் தொடர்புடைய குறித்த சாரதியை கைது செய்துள்ளதாகவும், இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right