விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்தில் நடத்தி வருகிறார். இது அவருக்கு 59 ஆவது படம்.

ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்து வெற்றிகரமாக ஓடிய பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகிறது. வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக்கபூர் தயாரிக்கிறார். இதில் அஜித்குமார் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். ஸ்ரத்தா, சிறிநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உட்பட மேலும் பலர் நடிக்கின்றனர். அஜித் சட்டத்தரணி வேடத்தில் நடிக்கிறார். 

மூன்று இளம் பெண்கள் ஒரு சிக்கலில் மாட்டுகின்றனர். அவர்களுக்கு பாலியல் தொல்லைகளும் வருகின்றன. அந்தப் பெண்களுக்காக அஜித் நீதிமன்றம் சென்று வாதாடி எப்பரி நியாயம் செய்ய கிடைக்க செய்கிறார் என்பது போல், திரைக்கதை அமைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்தப் படத்தற்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமையாக மாறியிருக்கிறார். அவரது புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

முந்தைய படங்களான வேதாளம், விவேகம், விஸ்வாசம் படத்திற்காக உடல் எடையை அதிகரித்திருந்தார். இந் நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தில் சட்டத்தரணி படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார். 

இந்தப் படம் ஒகஸ்ட் மாதம் திரைக்கு வந்ததும், மீண்டும் வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.