பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 5 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

ஹெரவப்பொத்தானைப் பகுதியில் வைத்தே குறித்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக சந்தேகித்தே குறித்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.