சசிகுமார் - நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்கும் படத்திற்கு ராஜவம்சம் என்று பெயர் சூடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதலாவது படம் இது.

சசிகுமாருக்கு இது 19 ஆவது படம். சுந்தர் சி யிடம் உதவி இயக்குனராக இருந்த கதிர்வேலு இப் படத்தை இயக்குகின்றார். படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், இந்தப் படத்தில்  49 நடிகர்களை நடிக்க வைத்துள்ளேன். இவ்வளவு அதிக நடிகர்களை நடிக்க வைத்து, இயக்கி இருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன் முறை. இதுவொரு சவாலாவிருந்தது. இதற்கு மிகப்பெரிய அனுபவம் வேண்டும். இதுவோர் குடும்ப படமாக மட்டுமல்லாமல். தற்போது நாட்டுக்கு தேவைாயன கருத்தொன்றும் இதில் உள்ளது.

இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றை மறந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். நாம் மறந்ததை நினைவூட்டும் படம் இது. ராதா ரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஸ், மனோபாலா, ரமேஸ் கண்ணா, சிங்கம்புலி, யோகி பாபு, கும்கி அஷ்வின், ராஜக்கபூர், நமோ நாராயணா, சாம்ஸ், ரேகா, சுமத்ரா, நிரோஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இப் படத்திற்கு இசையமைக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா படத்தை தயாரிக்கிறார். சென்னை பொள்ளாச்சி, பேங்கொக் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு இடம்பெறுகின்றது.