(செ.தேன்மொழி)

பொகவந்தலாவ பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி  மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொடியாகல பகுதியைச் சேர்ந்த 28, 48 ஆகிய வயதுகளையுடைய நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளதுடன் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.