உலக கிண்ணப்போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைமை தாங்குவதற்கு திமுத் கருணாரட்ணபொருத்தமானவர் என  முன்னாள் வீரர் குமார் சங்ககார தெரிவித்தள்ளார்.

தொடர்ச்சியாக ஒரு வீரரை தெரிவு செய்வதிலும் வீரர்களிற்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குவதிலும் கடந்த சில வருடங்களாக குழப்பநிலை நீடித்தது என குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

வீரர்களிற்கு தொடர்ச்சியாக அணியி;ல் வாய்ப்புகளை வழங்குவது அவர்களது நம்பிக்கையை அதிகரிப்பதற்கு அவசியம்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அணி வீரர்களை தொடர்ச்சியாக நீக்கி மாற்றங்களை செய்துகொண்டிருந்தால் அணியின் மூலோபாயங்களை நிறைவேற்றுவதை விட தனது இடத்தை தக்கவைத்துக்கொள்வது எப்படி என்ற சிந்தனையே மேலோங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுத் கருணாரட்ன மிகவும் திறமை வாய்ந்த ஒரு வீரர், சிறந்த துடுப்பாட்ட உத்திகளை கொண்டவர்,கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் அணிக்காக அவர் சிறப்பாக விளையாடியுள்ளார் எனவும் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்துவதால்நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடக்கூடிய திறன் மிகவும் முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுத் கருணாரட்ண புதியவராக புதிய அணித்தலைவராக விளையாடுவது அணிக்கு பெரும் உதவியாக அமையும் எனவும் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை வருடங்களாக பல விடயங்களை எதிர்கொண்ட அணியில் இடம்பெறாத ஒருவராக அவர் விளையாடுகி;ன்றார்,அவர் பக்கச்சார்பான சி;ந்தனைகளை கொண்டிருக்க மாட்டார் எனவும் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.