அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மூடி மறைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­வ­தாக  ஜன­நா­யகக் கட்சித் தலை­வர்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்ள நிலையில் அதற்கு ட்ரம்ப்  நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

நான் மூடி மறைக்கும் நட­வ­டிக்கை  எதிலும் ஈடு­ப­ட­வில்லை என அவர்  வெள்ளை மாளி­கையில் ஆற்­றிய உரையின் போது தெரி­வித்தார்.

அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையின் சபா­நா­யகர் நான்ஸி பெலோஸி டொனால்ட் ட்ரம்­பிற்கு எதி­ராக கண்­டனத் தீர்­மானம் கொண்டு வரும் முக­மாக ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த சக உறுப்­பி­னர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்த நிலை­யி­லேயே ட்ரம்பின் மேற்­படி விமர்­சனம் வெளியா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

ஆஜ­ரா­வ­தற்­கான ஆணை­களை  அலட்­சி யம் செய்­தமை,  ஆவ­ணங்­களை நிறுத்தி வைத்­தமை மற்றும் தற்­போ­தைய மற்றும் முன்னாள் ஆலோ­ச­கர்­களின்  சாட்­சி­யங்­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போட்­டமை  என்­ப­ன­வற்றின் மூலம் ட்ரம்ப் பாரா­ளு­மன்ற  விசா­ர­ணை­க­ளுக்கு ஊறு விளை­விக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்டு வரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் டொனால்ட் ட்ரம்ப்   நான்ஸி பெலோஸி மற்றும்  செனட் சபை தலை­வ­ர் ஆகி­யோ­ருடன் குறு­கிய நேர   சந்­திப்பை மேற்­கொண்­ட­மைக்கு ஒரு சில நிமிட நேரத்­தி­லேயே  தான் எத­னையும் மூடி மறைக்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­ட­வில்லை என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஜன­நா­யக  கட்சி தலை­வர்­க­ளு­ட­னான அந்த சந்­திப்பின் போது  ட்ரம்ப்  எவ­ரு­ட னும் கைகு­லுக்கிக் கொள்­ளவோ அன்றி  அமர்ந்து  உரை­யா­டவோ முயற்­சிக்­க­வில் லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தனக்கு எதி­ரான விசா­ர­ணை­களை ஜன­நா­யகக் கட்­சி­யினர் முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும் என மட்டும் தெரி­வித்து விட்டு எது தொடர்­பிலும்  கலந்­து­ரை­யா­டாது சந்­திப்பு இடம்­பெற்ற அறையை விட்டு  ட்ரம்ப் வெளியேறியுள்ளார். 

இந்­நி­லையில் வெள்ளை மாளி­கையில் ஆற்­றிய உரையின் போது ட்ரம்ப், "ஜன­நா­யகக் கட்­சி­யி­னரால் மேற்­கொள்­ளப்­படும் போலி­யான விசா­ர­ணை­க­ளுக்கு நான்  கண்­ட­னத்தைத் தெரி­விக்­கி­றேன்" என்று கூறினார். தனது அர­சியல் எதி­ரா­ளிகள்  தனக்கு எதி­ராக  கண்­டனத் தீர்­மா­னத்தைக் கொண்டு வர அணி திரண்டுள்ளதாக  அவர் குற்றஞ்சாட்டினார். ஜனநாயகக் கட்சியினர் தனக்கு எதிரான விசாரணைகளை கைவிடாத  வரை தான்  அவர்களுடன் அரசாங்க கொள்கைகள் குறித்து  கலந்துரையாடப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.