(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார். 

ஜனாதிபதி கையொப்பத்துடன் கூடிய பொது மன்னிப்பு உத்தரவு மாலை 5.00 மணியளவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிரி தென்னகோனிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே, ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மாலை 5.40 மணியாகும் போது அவர்  வெலிக்கடை சிறைச்சாலியில் இருந்து விடுதலை பெற்று சென்றார்.

பூரண விடுதலைப்பெற்ற ஞானசார தேரர்,  பாதுகாப்பு காரணங்களை மையப்படுத்தி வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலால் வெளியேறாமல், வேறு துணை வாயில் ஒன்றினூடாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். 

இந் நிலையில் விடுதலையான கொட்டாவ  - ருக்மல்கம விகாரைக்கு சென்றுள்ளதுடன், அங்கு ஞானசார தேரருக்கு விஷேட ஆசி பூஜை வழிபாடுகளிளும் கலந்துகொள்ளவுள்ளார். 

அத்துடன் இத்தேபான தம்மாலங்கார தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.