பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான உத்தரவுப்பதிரம் கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக சிறை வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க கையெழுத்திட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் கிடைத்துள்ளது. 

இதற்கமைய நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தார்.  

இந்நிலையில் கலகொட அத்த ஞானசார தேரரின் விடுதலைக்காக ஏராளமானோர் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்னால் காத்திருக்கின்றனர்.

இன்னும் சற்றுநேரத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலைசெய்யப்படலாமென அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.