ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார் ’படத்தில் வில்லனாக நடிக்க பொலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கபாலி, காலா , 2.0, பேட்ட ஆகிய படங்களைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘தர்பார்’. பொலிஸ் உயரதிகாரியாக  ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ்,  பிரதிக் பாப்பர், தலாப் தாஹில், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் கொர்பரேட் கம்பனியின் அதிபராகவும் வில்லனாகவும் பொலிவுட்டில் மூத்த நடிகர் சுனில் ஷெட்டி நடிக்கிறார்.

இவர் நடிக்கும் காட்சிகள் தற்போது மும்பையில் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பொலிவூட்டின் மூத்த நடிகரான சுனில் ஷெட்டி தற்போது இந்தி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, தென்னிந்திய மொழி படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இவர் தற்போது சுதீப் நடிக்கும் கன்னட படம் ஒன்றிலும், மோகன்லால் நடிக்கும் ‘மராக்கர் த லயன் ஆஃப் அரேபியன் ஸீ’ என்ற படத்திலும் வில்லனாக நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.