கொழும்பு பல்கலைக்கழகத்தின் ராஜகிரியில் உள்ள சுதேசிய வைத்திய கல்லூரியில் ஆயர்வேத வைத்தியப் பட்டப்படிப்பு கற்கைநெறியின் அனைத்து வருட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

யுனானி வைத்தியப் பட்டப்படிப்பு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. ஆயுர்வேத வைத்திய மாணவர்கள் இன்று விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.