வடக்கு மாலி பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைத்தளத்தின் மீது ஆயுததாரிகள் இன்று மேற்கொண்ட ரொக்கெட் தாக்குதலில் மூவர் பலியானதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் இரு ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும்  படையினரும் ஒரு பொது மகனும் பலியாகியுள்ளனர்.


இத்தாக்குதலுக்கு எவரும் பொறுப்புக் கூறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.