சௌதிக் பிஸ்வாஸ்

-

இந்தியாவில் பா.ஜ.க தேர்தல் வெற்றியை நோக்கி செல்கின்றது என்பது தற்போது தெளிவாகியுள்ளது. பாஜகவின் இந்த வெற்றி சொல்வதென்ன?

முதலாவதாக  நரேந்திரமோடி குறித்து மக்கள் மத்தியில் உள்ள கவர்ச்சி குறையாமல் உள்ளது- அது அழிந்துபோகவில்லை.

பாஜகவிற்காக வாக்குகளை பெற்றுக்கொடுக்கும் திறன் உள்ள ஒரே நபராக அவரே காணப்படுகின்றார்.

தனது கட்சிக்கு வாக்களிப்பது தனக்கு வாக்களிப்பதற்கு சமமானது என அவர் வலியுறுத்திவந்ததை வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இரண்டாவதாக பெருமளவு வளங்களை கொண்டுள்ள பாஜகவின் கட்சி இயந்திரங்கள் சாத்தியமான அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றன.இதனை தோற்கடிப்பது தற்போது கடினமானதாக மாறியுள்ளது.

தேசியவாதம், அபிவிருத்தி,மற்றும் மக்களை மதரீதியாக பிரித்தல்  ஆகியவற்றை உள்ளடக்கி பாஜக உருவாக்கிய தேர்தல் பிரச்சார தந்திரோபாயத்தி;ற்கு மாற்றீடான வலுவான எதிர்ப்பிரச்சாரத்தை முன்வைப்பதற்கு எதிர்கட்சிகள் தவறிவிட்டன.

வலுவான அர்ப்பணிப்பு மிக்க பாஜக போன்ற எதிரியை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தன்னை மீள்உருவாக்கம் செய்யவேண்டும்.

காங்கிரஸ் கட்சி கடினமாக பாடுபடும் கட்சியாக மாறவேண்டும்,அதன் பிராந்திய தலைவர்களை உருவாக்கவேண்டும். கிராம மட்டத்தில் தன்னை பலப்படுத்தவேண்டும்.

தேசியவாதம் போன்ற கொள்கையை எதிர்கொள்வதற்கு  நகரங்களில் கிராமங்களில் வேலைவாய்ப்பின்மை போன்ற கோசங்கள் போதுமானவையல்ல.மோடி தேசியவாதத்தை நன்கு பயன்படுத்தியுள்ளார்.