உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் திகதி முடிவடைந்தது .

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி ஓரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் செய்தி சேவைகளில் நடைபெறும் விவாதங்களில் கலந்துகொள்ள மாட்டேன். தேர்தல் முடிவுகள் பற்றிய தகவல்களை அறிவதற்கான வாய்ப்பை இழக்கிறேன். நாமொன்று நினைத்தால், இயற்கை ஒன்று நினைக்கிறது. மிகுந்த வருத்தத்தில் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.