ஊர்காவற்துறை - நாரந்தனை பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து 7வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றிலேயே சிறுமி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாகவும் இச் சம்வபம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஊர்காவற்தறை பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.