சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்கள் என்பவற்றை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி  922 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 913 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் சி.ஏ. புஜாரா 881 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், ஸ்டீப் ஸ்மித் 857 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்

டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 878 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் 862 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் கொகிஸோ ரபாடா 851 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், தென்னாபிரிக்காவின் ஃபிலாண்டர் 813 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் சகலதுறை ஆட்டக்காரர்

டெஸ்ட் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசைப் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் 440 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பங்களாதேஷ் அணியின் சஹிப் அல்-ஹசன் 400 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் ஜடேஜா 387 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 358 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்

ஒருநாள் துடுப்பாட்ட வீரர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 890 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரோகித் சர்மா 839 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்தின் ரோஷ் டெய்லர் 831 புள்ளிகளுன் மூன்றாவது இடத்திலும், மேற்கிந்தியத்தீவுகளின் ஷெய் ஹோப் 808 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் பந்து வீச்சாளர்

ஒருநாள் பந்து வீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பும்ரா 774 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூஸிலாந்தின் டிரண்ட் போல்ட் 759 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷத் கான் 726 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் இம்ரான் தாகீர் 703 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் சகலதுறை ஆட்டக்காரர்

ஒருநாள் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷின் சஹிப் அல்-ஹசன் 359 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 340 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மொஹமட் நபி 320 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தானின் இமாட் வசிம் 290 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இருபதுக்கு - 20 துடுப்பாட்ட வீரர்

இருபதுக்கு - 20 துடுப்பாட்ட வீரர் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் 896 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூஸிலாந்தின் கொலின் முன்ரோ 825 புள்ளிகளுடன இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் மெக்ஸ்வேல் 815 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 782 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இருபதுக்கு - 20 பந்து வீச்சாளர்

இருபதுக்கு - 20 பந்து வீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 780 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தானின் இமாட் வசிம் 710 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஷடாப் கான் 706 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்தின் அடில் ரஷத் 702 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இருபதுக்கு - 20 பந்து வீச்சாளர் சகலதுறை ஆட்டக்காரர்கள் 

இருபதுக்கு - 20 பந்து வீச்சாளர் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் மெக்ஸ்வெல் 390 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சஹிப் அல்-ஹசன் 339 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபி 331 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பங்களாதேஷின் மாமதுல்லா 221 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.