(செய்திப்பிரிவு)

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சோதனை நடவடக்கைகள் கல்கிஸை, மோரகாஹென மற்றும் பொரள்ள ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 10 கிராமிக்கும் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருட்கள் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளது .

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது கல்கிஸ்ஸை - கடோவிட்ட பிரதேசத்தில் 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினுடன் 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று மோரகாஹென - கிதேல்ப்பிடிய பகுதியில் 02 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயினுடன்  மில்லேவ பகுதியை சேர்ந்த 39 வயதுடை சந்தேக நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ள பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போது 06 கிராம் 100 மில்லி கிராம்  ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொரள்ள பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.