இந்திய அணிக்காக போட்டியை வென்றுக்கொடுக்ககூடிய வீரர்கள் அணியிலிருப்பதனாலும் மகேந்திர சிங் டோனியின் நிபுணத்துவம் காரணமாகவும் இம்முறை இந்திய அணி உலக கிண்ணத்தை கைப்பற்றும் என இந்திய மகளிர் அணியின் தலைவி மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில்  போட்டியை வென்று கொடுக்ககூடிய பல வீரர்கள் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

விராட்கோலி முன்னணியில் நின்று தலைமை தாங்குகின்றார் ,ரோகித்சர்மா  தவான் போன்ற சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ள மித்தாலி ராஜ் பும்ரா இந்திய அணியில் பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது ஓவர்களில் அதிகளவு ஓட்டங்களை பெறக்கூடிய அணிகளும் அந்த ஓட்டங்களை எதிரணி எடுக்காமல் தடுக்ககூடிய பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணிகளுமே இந்த உலக கிண்ணப்போட்டிகளில் வெற்றிபெறப்போகின்றன என தெரிவித்துள்ள  மிதாலி ராஜ் இந்திய அணி மிகவும் ஆழமானது எனவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் அணியில் டோனியின் நிபுணத்துவமும் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தனியொரு வீரரை என்னால் குறிப்பிட முடியாது  அணியை வெற்றிக்கு இட்டுச்செல்லக்கூடிய பல வீரர்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண போட்டியை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பே அதிகமாக காணப்படுகின்றது என மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.