கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை, புளூமெண்டல் ஒழுங்கையில்  உள்ள வீடொன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 67 வயதான ஓய்வுப்பெற்ற வைத்தியர் ஒருவருடையதென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை  கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.