அனு­ரா­த­பு­ரத்தில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்­ளிட்ட 31 பேர் குண்­டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்ட வழக்கில் இரண்­டா­வது எதி­ரிக்கு ஆயுள்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

2008 ஆம் ஆண்டு தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் ஒன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்­ளிட்ட 31 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்­பான வழக்கில், முதல் எதி­ரி­யான சண்­மு­க­நாதன் சுதர்ச­னுக்கு 2014, செப்­டெம்பர்  5 ஆம் நாள்,  அனு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­தினால், 20 ஆண்டு கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதிக்கப்பட்­டது.இதை­ய­டுத்து, இந்த வழக்கு அனு­ரா­த­புரம் சிறப்பு மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டது.

இந்த நிலையில், நேற்று முன்­தினம் இந்த வழக்கின் இரண்­டா­வது எதி­ரி­யான அமீர் உம­ருக்கு ஆயுள்­தண்­டனை வழங்கி அனு­ரா­த­புரம் சிறப்பு மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அத்­துடன் விடு­தலைப் புலி­களால் அவ­ருக்கு வழங்­கப்­பட்ட பெறுமதி மிக்க உடை­மைகள் அனைத்­தையும் பறிமுதல் செய்து, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.