உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அணியிலிருந்த நீக்கப்பட்டதனால் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜூனைட் கான் வித்தியாசமான முறையில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் உத்தேச அணியில் இடம் பிடித்திருந்த ஜூனைட் கான், 15 பேர் கொண்ட இறுதி அணியில் சேர்க்கப்படவில்லை. 

இதனால் அதிருப்தி அடைந்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வாயில் கருப்பு செலோடேப்பை ஒட்டிக்கொண்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் ‘நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, உண்மை கசக்கும்’ என்றும் அவர் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அவரை கண்டித்ததால் சில மணி நேரங்களில் அந்த டுவிட்டை அழித்து விட்டார் ஜூனைட் கான்.