உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்குதல்தாரிகளுடன் நெருங்­கிய தொடர்பை பேணி வந்த சந்தேகத்தில் தர்­கா­நகர் பிரதேசத்தில் கைது செய்­யப்­பட்ட சந்தேகநபர் பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 குறித்த சந்­தே­க­நபர் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அளுத்­கம பொலிஸாரால் தர்­கா­ந­கரில் வைத்து கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் ருவன் குண­சே­கர கூறி­யுள்ளார். 

அவர் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­பட்ட போது, தற்­கொலை குண்­டு­தா­ரி­யான மொஹமட் பசீர் மொஹமட் பஸ்ஹான் என்­ப­வ­ருடன் நெருங்­கிய தொடர்பை பேணி வந்­துள்­ளதாகத் தெரிய வந்­துள்­ளது. 

சந்­தே­க­நபர் மேல­திக விசா­ர­ணைக்­காக பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.