சேதமடைந்த பள்ளிவாசல்கள் புனரமைக்கப்படும்

Published By: Vishnu

23 May, 2019 | 10:35 AM
image

குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் கடந்த வாரம் இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு பகுதி அளவில் அல்­லது முழு­மை­யாக சேத­ம­டைந்த அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளையும் புன­ர­மைத்து தரப்­படும் என வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்­துள்ளார். 

அத்­துடன் சேத­ம­டைந்த பள்­ளி­வா­சல்­களின் விப­ரங்­களை தரு­மாறு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­வற்­றிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.  அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மற்றும் வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சின் அதி­கா­ரி­க­ளுக்­கி­டையே நேற்­றைய தினம் அமைச்சில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது. 

இதன்­போது, மத்­திய கலா­சார நிதி­யத்தின் ஒதுக்­கீட்டில் வடமேல் மாகாணம் மற்றும் கம்­பஹா மாவட்­டத்தில் தாக்­கு­த­லுக்­குள்­ளான பள்­ளி­ வா­சல்­களை நிர்­மா­ணித்­துக்­கொ­டுப்­ப­தற்­கான யோச­னையை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ முன்­வைத்­துள்ளார். அத்­துடன், பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை திரட்­டு­மாறும் அதி­கா­ரி­க­ளுக்கு பணித்­துள்ளார். 

இத­னி­டையே, முஸ்லிம் சமய விவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு பாதிப் புக்குள்ளான பள்ளிவாசல்கள் தொடர் பிலான முழு அறிக்கையும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09