முப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் மீது குற்றம் சுமத்த வேண்டாம். அவர்கள் அவர்களுடைய கடமையை செய்தார்கள். அதனால் தான் 30 வருட யுத்தத்தை அவர்கள் முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இந்நிலையில் இந்த அடிப்படைவாதிகள் எவ்வாறு உருவாகினார்கள் என்றால் இங்குள்ள அரசியல்வாதிகளின் உதவியுடன் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி சுமணரத்ன தேரர் தெரிவித்தார் .
இலங்கை உளவியல் ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேவலாயத்தில் உயிர் நீத்தவர்களின் 31 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) மட்டுகாந்தி பூங்காவில் இடம்பெற்றது
அதன் போது மங்களராமா விகாரை விகாராதிபதி சுமணரத்ன தேரர் ஈகைச்சுடர் ஏற்றி உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களிலும் மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாக்குதலில் உயிரிழந்து ஒருமாதம் பூர்தியான நிலையில், நாம் அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி நினைவூட்டுகின்றோம்.
தங்களுடைய கடவுளுக்கு முன்னாள் தங்களுடைய வேண்டுதலை வேண்டிக் கொண்டிருந்த போது இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிர்நீத்த குழந்தைகள் சகோதர சகோதரிகள் , தாய்மார்கள் அனைவரின் ஆன்மாக்களும் சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.
உண்மையில் என்னால் தமிழ் மொழியில் பேச முடியவில்லை. மட்டக்களப்பு மாவட்டம் 30 வருட யுத்தத்திற்கு முகம் கொடுத் மாவட்டம் அந்த யுத்த பாதிப்பில் இருந்து அழிவதற்குமுன் மீண்டும் அசம்பாவிதம் நடந்துள்ளது.
எமது நாட்டில் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு இன மதபேதமற்று வாழ்ந்த ஒரு மதம் சார்ந்த இனக்குழுதான் என்பது நாம் அறிந்த விடயம்.
இந்த நாட்டில் இனங்கள், மதங்கள் ஒன்றாக வாழவேண்டும் நாம் சகவாழ்வினை ஒரு தாயின் குழந்தைகளாக ஒரு நாட்டிற்குள் வாழ்ந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.
ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் பலம் பொருந்திய பயங்கரவாதிகள் உருவாகும் வரை இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் பார்த்துக் கொண்டிருந்தமை தொடர்பில் மதகுரு என்றவகையில் கவலையடைகின்றேன்.
நாம் ஒவ்வொருவருக்கும் கடமை, பொறுப்புகள், தேவைப்பாடுகள் இருந்தால் இலங்கையில் சமாதானத்துடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென்றால் இவ்வாறான கொடூரமான பயங்கரவாதிகளுக்கு இடமளிக்வேண்டாம்.
காலையில் இருந்து இரவு வரைக்கும் கடவுளை பிராத்திக்கின்ற புனித ஆலயங்களில் வாள் , கத்தி, கட்டைகள் வைத்திருப்பது வெட்டகமான செயலாகும்.
எனவே இஸ்லாமிய சகோதரர்கள் எங்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்தது போன்று எதிர்காலத்தில் அவ்வாறான சமாதானத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் உங்களுக்கு இவ்வாறான பயங்கரவாதிகளைத் தெரியுமாக இருந்தால் பாதுகாப்பு படையினருக்கு அறியப்படுத்தி மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து முஸ்லிம்களும் உதவி செய்யவேண்டும்.
இந்த கொடூரமான பயங்கரவாதிகளை கைதுசெய்ய முஸ்லிம் மக்கள் உதவி செய்யாது அவர்களை பாதுகாப்பவர்களாக இருந்தால் முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகள் எனக் கூறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என முஸ்லிம் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
எனவே முப்படையினர், புலனாய்வு பிரிவினர் மீது குற்றம் சுமத்த வேண்டும் அவர்கள் அவர்களுடைய கடமையை செய்தார்கள் அதனால் தான் 30 வருட யுத்தத்தை அவர்கள் முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இந்த தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை கையில் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே உங்களுடைய மக்களுக்கு அழிவு அநீதி இடம்பெறக்கூடாது. எனவே இதற்காக நீங்கள் தமிழ் மக்களின் ஒரு வேலைத்திட்டத்திற்காக ஒன்று சேர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது நல்லது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM