கல்­முனை அஷ்ரப் ஞாப­கார்த்த வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் இரண்டு உயிர்கள் காப்­பாற்­றப்­பட்­ட­தாக சத்­திர சிகிச்சை நிபுணர் முஹம்மட் சமீம் கூறினார்.

பித்­தப்பைக் குழாயின் வாயி­லுக்கு அரு­கில் பித்­தப்பைக் கல் அடை­பட்டுக் காணப்­பட்ட இரு நோயா­ளி­க­ளுக்கு ERCP சிகிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­ட­தா­கவும் குறிப்­பிட்டார்.

கடந்த காலங்­களில் இவ்­வா­றான சிகிச்சை முறையில் ERCP மூலம் அகற்­று­வ­தற்­காக கொழும்பு, களு­போ­வில, ராகமை என்­றெல்லாம் மக்கள் சென்று பெரும் சிர­மப்­பட்டு பணத்­தைச் செலவு செய்து வந்த நிலையில், மக்­க­ளுக்கு தற்­போது கல்­முனை அஷ்ரப் ஞாப­கார்த்த  வைத்­தி­ய­சா­லை­யிலும் இச்சிகிச்சையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு வசதி வாய்ப்­புகள் அமைந்­தி­ருப்­பது பெரும் வரப்­பி­ர­சா­த­மாகும். அதுபோல் பிர­தே­சத்தின் ஏழை மக்கள் இதனால் மிகவும் பிர­யோ­ச­ன­ம­டைவர்.  

வைத்­தி­யத்­ துறை புனி­த­மா­னது. அதற்கு இன, மத பேதம் தெரியாது என்பதற்கு மேற்படி சத்திரசிகிச்சை சிறந்த உதாரண மாகும் என்றார்.