அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதத்திற்கான திகதியை நிர்ணயம் செய்வது தொடர்பில் நேற்றைய தினமும் பாராளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

ஒன்றிணைந்த எதிரணியினர் இது குறித்து சபாநாயகரிடம் தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்தனர்.

குறித்த அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை இன்றைய தினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் ஆராய்ந்து அறிவிப்பதாக சபாநாயகர் சபையில் தெரிவித்துள்ளார்.