சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 9 க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.

(AP Photo/Farah Abdi Warsameh)

கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களான அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில், போந்தேரோ மாவட்ட எல்லையில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடி அருகே அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடி குண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 

ஒரு பெண் இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.