பா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பல் ; முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் 

Published By: Digital Desk 4

22 May, 2019 | 07:43 PM
image

பா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பல். மூழ்கும் கப்பலில் இருக்கைகளை எங்கே வைத்தால் தான் என்ன?  என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், மத்திய அமைச்சருமான சசி தரூர் பா.ஜ.கவை கிண்டல்,செய்துள்ளார்

இது தொடர்பாக அவர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“ நான் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. இதற்கு முன்னரும் பலமுறை கருத்துக்கணிப்புகள் பொய்த்துள்ளன. 2004 ஆம் ஆண்டில் கருத்துக்கணிப்புகள் வாஜ்பாய் வெற்றி பெறுவார் என்றது. ஆனால் என்ன நடந்தது? முடிவு என்னவாக இருந்தாலும், இப்போது கருத்து கணிப்புகளில் சொல்லப்படும் அளவிற்கு சீட்டுகளை நிச்சயமாக பா.ஜ.க பெறாது. 

கருத்துக் கணிப்புகள் எப்போதுமே ஒரு சார்பாகவே இருப்பது இயல்பு. மக்களிடம் யாராவது சென்று கருத்துக் கணிப்பு என கேள்வி கேட்டால், அவர்கள் ஆளுங்கட்சி ஆட்களோ என பயந்து, மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களித்ததாக தான் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் வேறு கட்சிக்கு வாக்களித்து இருக்கலாம். 

தேர்தல் முடிவிற்கு முன்னர் பாஜகவினர் என்ன மாதிரியான கொண்டாட்டத்தில் வேண்டுமானாலும் ஈடுபடட்டும். ஆனால் இறுதி முடிவு வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது. வாக்காளர்களின் விருப்பம் என்னவென்பது நாளை நமக்கு தெரிந்துவிடும். பா.ஜக ஒரு மூழ்கும் கப்பல். அந்தக் கப்பல் இருக்கைகளை எங்கே வைத்தால் தான் என்ன? என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52