தடிமல் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை காலையில்கொடுப்பது நல்ல பலனைத் தரும் என்று பிரிட்டனில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

முற்பகல் 11 மணிக்கு முன்னதாக தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களின் உடலில் காணப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து மிகவும் வீரியமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குறித்த விஞ்ஞானிகள் 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் 300 பேரிடம் இந்த ஆய்வினை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.