ஜெயம் ரவி நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக பொலிவூட் நடிகையான நிதி அகர்வால் அறிமுகமாகிறார். 

ரோமியோ ஜூலியட். போகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லக்ஷ்மன் அடுத்ததாக இயக்கவிருக்கும் ஜெயம் ரவியின் 25வது படத்தில். அவருக்கு ஜோடியாக நடிக்க பொலிவுட் நடிகை நிதி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாவது குறித்து பேசுகையில்,“ நான் சிறிய வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சாலையில் பயணிக்கும் பொழுது உலக அழகி ஐஸ்வர்யா ராயின் சுவரொட்டியை பார்க்கும் போதெல்லாம் என்முடைய முகமும் விரைவில் இது போல் அனைவராலும் ரசிக்கப்படக் கூடிய வகையில் வரவேண்டும் என்று எண்ணுவேன். 

அதன் அடிப்படையில்தான் அழகிப் போட்டியில் பங்கு பற்றினேன். அதனைத் தொடர்ந்து இந்தியிலும், தெலுங்கிலும் நடிகையாக என் பயணத்தை தொடங்கி இருக்கிறேன். தற்போது தமிழில் அறிமுகமாகி இருக்கிறேன். நல்லதொரு அறிமுகமாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

ஜெயம் ரவி தன்னுடைய 24 வது படமான‘கோமாளி ’படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, அவருடைய 25 வது படத்தில் நிதி அகர்வால் ஜோடியாக நடிப்பது.. அவருடைய ரசிகர்கள் சுவராசியமான தகவல் தகவலாக பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.